கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை, 57வது ஒழுங்கையில்
கொழும்பு தமிழ் சங்கம் உள்ளது. மன்னர்கள், புலவர்கள் காலத்திலே சங்கம்
வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதால் "தமிழ் சங்கம்" என்ற வார்த்தைக்கு ஒரு புனிதத்
தன்மை உண்டு. அந்த புனிதத்தை உணர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் வேலணை வேணியன்
கொழும்பில் அது அமைந்துள்ள 57வது ஒழுங்கையை தமிழ் சங்க ஒழுங்கை என பெயர்
மாற்றம் செய்ய யோசனை முன்வைத்தார். இந்த யோசனை கைகூடி வந்தவேளை பேரினவாத
சதிகாரர்களால் அதற்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது.
இந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிய ஜனாநாயக மக்கள் முன்னணி கட்சி, மேல் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சிங்கள தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்தது. இந்த பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகள் செய்யப்படுகிறன்ற நிலையில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.