Tuesday, May 22, 2012

புகுந்த வீட்டிற்கு அனுப்பவேண்டிய மகளை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்


அன்பு, பாசம், ஒழுக்கம், முயற்சி, நன்மை, தீமை என உலக வாழ்வின் அனைத்து அடிப்படை விடயங்ளையும் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முதல் ஆசான்களாக பெற்றோர்கள் இருக்கவேண்டும். அது பெற்றோர்களின் கடமையும் கூட. சிலர் அவ்வாறு வாழ்கிறார்கள். சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சரியான வழியில் வழிநடத்த தவறுகின்றனர்.


பிள்ளைகள் சிலரின் தவறான முடிவுகளிற்கு அல்லது பிள்ளைகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தூண்டுதல்களாக, காரணியாக பெற்றோர்களே இருப்பது கசப்பான உண்மையும் கூட. பெற்றோர்களின் தவறான செயற்பாடுகளால் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தற்போது வடக்கிலும் அதிகரித்து வருகின்றமை கண்கூடு. கட்டுக்கோப்பாக வாழ்ந்த ஒரு சமூகம் இன்று தெறிகெட்ட மாடுகளைப் போல் உள்ளது. யாழ் சமூகத்தைப் பற்றி குறை கூறுவதாகவோ அன்றி யாழ் சமூகத்தை இழிவு படுத்துவதாகவோ நினைக்காது நடந்த சம்பவத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். 

பன்றி பன்றியாகவும் மாடு மாடாகவும் இருக்கும் போது யாரும் அவற்றைப் பற்றி பேசமாட்டார்கள். ஆனால் ஒரு மாடு பன்றியாக மாறும் போது அல்லது ஒரு பன்றி மாடாக மாறும் போது அது பலரது கவனத்தையும் ஈர்க்கும். அது போல் தான் யாழில் இன்றைய நிலையும் அதற்காக முன்பு சீரழிவுகள் இடம்பெறவில்லை என கூறமுடியாது. இடம்பெற்றன தான் குறைவாக. 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தம் மட்டுமே பேசு பொருளாக இருந்தது. இன்று யுத்தம் இல்லை. சமூக நெறிப்பிறள்வு பேசு பொருளாகி விட்டது. அதிலும் புலம்பெயர் ஊடகங்கள் ஒன்றை பத்தாக திரிவு படுத்தி கூறுவதில் தனிச் சிறப்பு பெறுகின்றன.

கடந்த மாதம் யாழ் நகரப்பகுதியில் தந்தை ஒருவரின் தவறான செயற்பாடுகளினால் உயிரை மாய்த்துக் கொண்ட திறமை மிக்க இளம் பெண் ஒருவர் பற்றியதாக இந்த பதிவு அமைகிறது.

நகர்புரத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த குடும்பத்தின் தலைவன் வியாபாரம் செய்து வர தலைவி இனிதே குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். தந்தைக்கு துணையாக ஒரு ஆண் மகனும், அன்னைக்கு ஆதரவான அழகான இரண்டு பெண் பிள்ளைகளும் இவர்களுக்கு இருந்தனர்.

மூத்த பெண் பிள்ளையை பெயர்போன ஒரு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவ்வாறு இருக்கையில் இவர்களது குடும்பம் வறுமையை எதிர்கொள்ள வேண்டி வந்தது. இளைய மகள் சாதாரண தரம் படித்து விட்டு உயர் தரத்தில் நுழையும் காலம். சாதாரண தரத்தில் A,B தர சித்திகளைப் பெற்ற அவள் உயர்தரத்தில் கற்கும் ஆவலோடு இருந்தாள். 

எனினும், பெற்றோர் வறுமை என கூறி கற்க அனுமதிக்கவில்லை. வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டாள். இரண்டு ஆண்டுகளாக வீடே உலகமானது. 


தந்தை கொழும்பும் யாழ்ப்பாணமுமாக வியாபாரம் என்ற பேரில் திரிந்தார். காலம் செல்லச் செல்ல கொழும்பிலேயே அதிக காலம் தங்க ஆரம்பித்தார். தந்தையின் இடத்தை நிறப்ப வேண்டிய குறித்த பெண்ணின் அண்ணும் கொழும்பிலேயே தங்கிவிட்டார். 

யாழில் தந்தை பெற்ற அதிகப்படியான கடன்களே இவர்கள் கொழும்பில் தஞ்சம் புக காரணமாக அமைந்தது. வீட்டில் உள்ள வயதுவந்த மகளையோ, மனைவியைப் பற்றியோ குடும்பத் தலைவன் பொருட்படுத்தவில்லை.

கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தினமும் தொந்தரவு செய்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகளவில் அந்த இளம் பெண்ணே கடன்காரர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி எற்பட்டது. தாய் வெளி வேலைகளுக்காகச் சென்று விடுவாள்.

விட்டிற்கு வரும் கடன்காரர்கள் அந்த 20 வயதேயான இளம் பெண்ணிடம் பலவாறு அவதூறாகப் பேசியுள்ளனர்.  வயது போனர்களும் "என்னுடன் வந்துவிடு, என்னை திருமணம் செய்து கொள் எனத் தொடங்கி தகாதவாறும் பேசியுள்ளனர். இவ்வாறான அவமானங்களை தாங்கிக் கொள்ள முடியாத அவள் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தாள்.

சம்பவம் இடம்பெற்ற அன்று தாயார் கடைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கையில் எனக்கு பயமாக இருக்கிறது அம்மா, தனியாக விட்டுச் செல்லாதேங்கோ என மகள் கேட்டுக் கொண்டுள்ளாள். வீட்டுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை இருந்த காரணத்தினால் தாயார் புறப்பட்டுச் சென்றுள்ளார்.


கடைக்குச் சென்று திரும்பிய தாய் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது உயிரற்ற மகளின் உடல் நடு வீட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டில் உள்ள காற்றாடியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருந்தாள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அருமை மகள்.


கொழும்புக்கு அடிக்கடி சென்று வரும் இவருக்கு அங்கும் ஒரு குடும்பம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. வெளியிலும் நடமாட முடியாது, வீட்டிலும் இருக்க முடியாத இளம் பெண் மரணத்தை நாடிச் சென்றுள்ளார்.
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தாய், தந்தையே தன் பிள்ளைக்கு ஜெமனாக உருமாறியுள்ளனர்.
13 comments:

 1. சிந்திக்க வைக்கும் பதிவு...இவ்வாறானவர்களை சரியான முறையில் தண்டிக்க வேண்டும் ஒரு குடும்பத்தை மேனேஜ் பண்ண முடியாமல் கடன் பட்டவனுக்கு இன்னுமொரு குடும்பம் கட்டாயம் தேவையா..?

  அப் பெண்ணின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 2. சரி தான் மூஸா, ஆசை யாரை விட்டது. ஆனால் பெற்றோர் ஆன பின்னர் பிள்ளைகளை நினைத்து பொறுப்பாக இருக்க வேண்டும்.

  ReplyDelete
 3. உண்மை.இவ்வாறு திரைக்கு வராத கொடுமைகள் இன்னும் ஏராளம்..அபிவிருத்தி நுகர்வுசுதந்திரம் சமாதானம் என்ற மாயை மற்றும் மிகவே திட்டமிடப்பட்ட கலாசார மாறுபாடுகளின் ஒரு வெளிப்பாடு தான் இந்த சோகமும்.என் மண்ணின் இந்த நிலையும்....பெற்றோர் மிகமிகவே அக்கறையாயிருக்க கடமைப்பட்டுள்ளார்கள்..கொஞ்சம் விவேகத்துடன் நடந்து மன அழுத்தங்களை வென்று வாழ வேண்டும்..

  ReplyDelete
 4. @ Athisaya

  இங்கு பெற்றொரின் கடமைகள் தான் முக்கியம், பெற்றொர்கள் நினைத்தால் எந்தப் பிள்ளையையும் வல்லவர்களாக நல்லவர்களாக வளர்க்க முடியும்

  ReplyDelete
 5. பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வளர்க்கவேண்டும்

  ReplyDelete
 6. சமுகத்தில் குடும்பத்தலைவன் பொறுப்பை தவறி விடுவதும் அந்த குடும்பத்தை நிமிர வைக்க வேண்டிய மகன் வழிமாறிப்போனால் இப்படி வரும் தற்கொலைகளை தவிர்க்க முடியாது !ம்ம் பாவம் அந்த நங்கை வாழ்க்கை!

  ReplyDelete
 7. இப்படியான சமூகப் பிறழ்வுகள் பெரியவர்களிலிருந்தே ஆரம்பிக்கின்றன போலும்!கேட்கவே மனது பதறுகிறது.

  ReplyDelete
 8. @ T.N.MURALIDHARAN
  தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டுமே...

  என்னதான் தைரியம் இருந்தாலும் மானத்திற்கு முன் கோழைகளாக பலர் உள்ளனர்.

  ReplyDelete
 9. @ தனிமரம்

  உண்மை தான் அண்ணா, பொறுப்பாக நடக்க வேண்டியவர்கள் அவர்களது கடமையை உணர்ந்து நடக்காதவரை ஒவ்வொரு குடும்பங்களும் இப்படித் தான்...

  ReplyDelete
 10. @ Yoga.S.
  தினமும் தாயக செய்திகளை கேட்டால் ஏதோ பதட்டம் தான் மிச்சம்...

  வழி நடத்த வேண்டிய பெரியவர்களே வழி தவறிப் போனால் சிறியவர்கள் என்ன செய்வது

  ReplyDelete
 11. நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே.

  ReplyDelete