Monday, June 10, 2013

உயிர் இருக்க உடலை அரிக்கும் புற்றுநோய்: இலங்கை மக்களின் நிலை என்ன ?

யுவராஜ் சிங், ஆஞ்சலினாஜோலி, மனிஷா கொய்ராலா என கிரிக்கெட், சினிமா, உலக தலைவர்கள்  பிரபல்யங்களுக்கு புற்றுநோய் என்றதும் நாம் ஒருகணம் இனந்தெரியாத துன்பத்துக்குள் தள்ளப்படுகிறோம். விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். ஆனால் எமது பக்கத்து வீட்டில், பக்கத்து தெருவில் என்று ஆறு மாத குழந்தை முதல் 60,70 வயது முதியவர் வரை புற்றுநோயினால் அரிக்கப்படுக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்தவர்களை விடுங்கள், குழந்தைகள் செய்த பிழை, பாவம்தான் என்ன ? அவர்களுக்காக நாம் ஒரு நொடியை ஏனும் செலவழித்திருக்கிறோமா ?


மனித உடலையும், மனைதையும் புற்று புற்றாய் அரித்து அழிக்கும் புற்றுநோய், தலைமுதல் கால்வரை உடலின் எந்தப் பாகத்தையும் தாக்கக் கூடியது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Monday, May 27, 2013

வெசாக் பார்க்கலாம் வாங்க.......!

இலங்கை பௌத்தர்களினால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக வெசாக் காணப்படுகிறது.  "வெசாக்" மே மாத பௌர்ணமி தினத்தன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றிற்காக இலங்கையில் பெளத்த சிங்களவர்களால் வெசாக் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. 


பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். "வெசாக்" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.

Wednesday, January 16, 2013

ரிஸானாவின் மரணதண்டனையில் சாதித்தது என்ன ?


"ரிஸானா நபீக்" இன்றுடன் ஒரு கிழமையாக அனைவர் வாயிலும் உச்சரிக்கும் ஒரு நாமமாக மாறிவிட்டது. ரிஸானா அவள் எம்மைவிட்டு மறைந்தாளும் அவளது இழப்புக் குறித்த பேச்சுக்கள் இப்போதைக்கு மறையப் போவதில்லை. ரிஸானாவிற்கான தண்டனை குறித்து பெருமைகொள்ளும் ஒரு கூட்டமும், கண்டனங்களை தெரிவிக்கும் மற்றுமொரு கூட்டமும் இன்றும் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றன.


இதுரை நான், எந்தவொரு மதம் குறித்தோ சமூகம், இனம் குறித்து பேசியதோ, முக்கியத்துவம் கொடுத்தோ இல்லை.  ஆனாலும் ரிஸானாவின் படுகொலை, அவளது முயற்சி மரணித்தமை என்னை கண்கலங்க வைத்துவிட்டது.  மதத்தை மட்டும் வைத்துக்கொண்டு கூச்சலிடும் யாரும் தயவுசெய்து இந்த கட்டுரையை தொடர்ந்து வாசிக்கவேண்டாம். உணர்வுள்ள மனிதர்கள் மட்டும் வாருங்கள் பேசலாம்.

Friday, January 4, 2013

இன அழிப்பு செய்யாதீர்! யாழ். வைத்தியர்களிடம் ஒரு கோரிக்கை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம் பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த அவசர உலகில் நோய் இல்லாத மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இரண்டு வயது குழந்தைக்கும் சலரோகம், புற்றுநோய் ஆட்கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறது. 


இலங்கையைப் பொறுத்தவரை வடமாகாணத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம்.  இயற்கை காரணிகள் ஒரு பக்கம் இருக்க செயற்கையான கொடூர யுத்தம், அம்மக்களை மேலும் தலை தூக்க விடாமல் நோய் என்ற அரக்கனை அவர்களுக்கு பரிசளித்துள்ளது. நோயின் தாக்கத்தால் இங்குள்ள மக்கள் வெய்யிலில் தவிக்கும் புளுவாக ஒருபக்கம் நெளிய,  பெருந் திரளான நோயாளர்களுக்கு ஏற்ற மருத்துவ வசதிகள் அங்கு இல்லை என்பது அவர்களை மேலும் சுருட்டி விடுகிறது.