Sunday, April 8, 2012

கொழும்பு பஸ்களில் ஆண்களின் அட்டகாசங்கள்


இலங்கையின் வியாபார நகரமாகிய கொழும்பில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் போக்குவரத்து சாதனம் பஸ்தான். 

இந்த பஸ்களில் பெண்கள் பிரயாணஞ் செய்வதென்றால் அப்பப்பா...... ஒரு நரக லோகம் தான். காலையிலும் மாலையிலும் வேலைக்கு போய்வரும் பெண்கள், பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் பஸ் பிரயாணத்தில் படும் பாடு கொஞ்ச நெஞ்சம் இல்லை.

காலையில் எழும்பி உற்சாகத்தோட வேலைக்கோ பாடசாலைக்கோ வெளிக்கிட்டு ஓடிப் போய் பஸ்ஸ பிடிச்சு ஒரு மாதிரி ஏறினா, அதில் வரும் அன்புச் சகோதரர்கள் இருக்கினம் பாருங்கோ நாய மாதிரி நாக்கில வீணீர் வடிய வடிய ஒரு பார்வை பாப்பினம்.அதோட விடுவினமா சாரதி பிறேக் போட்டா என்ன போடாட்டி என்ன ஒரு ஆட்டம் ஆடுவினம். பிறகு எப்படா பாதசாரதிகள் கடவை வரும் சட்டெண சாரதி பிறேக் பிடிப்பார் என்று பாத்துக் கொண்டு இருப்பார்கள்.ஆசனத்தில் இருந்த யாராவது எழும்பீட்டா அதுல இருக்காம நிக்கிற பெண்களுக்கு இடம் விட்டுத்தாற மாதிரி விடுவார்கள். பிறகு அந்த பெண்களுக்கு பக்கத்தில் வந்து உரசிற உரசில கொழும்பில் காலையில் அடிக்கிற குளிர் போய் உடம்பெல்லாம் நெருப்பா தான் எரியும்.

ஜன்னல் கரையா ஒரு ஆசனம் கிடைச்சு காத்து வாங்கலாம் என்று ஒரு பெண் போய் இருந்தா அதுக்கும் விடுவார்களா இற்த ஈனப் பிறவிகள் ? பக்கத்தில் வந்து இருந்து அப்படியே தள்ளித் தள்ளி சிவரில ஒட்டி நிற்கும் பல்லிய மாதிரி ஆக்கிப் போடுவாங்கள்.காலையிலேயே இந்த நிலை என்றால் மத்தியானம் பின்னேரம் என்று சொல்லத்தான் வேண்டுமா? 

இதிலும் அதிகமாக பாதிக்கப்படுவது தமிழ்ப் பெண்களே. தமிழ்ப் பெண்களை கண்டதும் தமிழ், சிங்கள ஆண்கள் என இருவருக்கும் ஒரு இலங்காரம் போல. உடனே தங்களுடைய வீர தீர செயல்களை ஆரம்பித்து விடுவார்கள். 

தூணைக் கண்டதும் காலைத் தூக்கும் நாயிற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றுதான் தெரியவில்லை. இந்ந குரங்குகளின் சேட்டைகளில் இருந்து தப்புவதற்கு எங்கட பெண்களும் கொஞ்ச உத்திகள் வைத்திருக்கிறார்கள்.புக்கத்தில வந்து சொறியும் குரங்குகளுக்கு, குடையால நல்லா ஒரு இடி இடித்தல். புக்கத்தில இருந்து நசிப்பவர்களுக்கு சட்டைக்கு குத்தும் ஓசியால் ஒரு குத்து. நின்று கொண்டு இடிப்பவர்களுக்கு குதியுடைய செருப்பால் ஒரு மிதி மதிப்பது என்று சிறிய முயற்சிகளையும் பெண்கள் எடுக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் இவை சில நேரங்களில் தான். ஆதற்கும் நம் வீரமங்கையர்களுக்கு தைரியம் வருவதில்லை. எப்பதான் இந்தப் பிறவிகள் எல்லாம் மனித ஜென்மத்திற்குள் அடங்கப் போகிறார்களோ தெரியவில்லை.

13 comments:

 1. அட நம்ம கலை அக்கா இங்க பார்ரா அக்கா கூட ப்ளாக் வச்சிருக்கிறாங்க...சொல்லவே இல்ல...

  ReplyDelete
 2. நல்ல பதிவு தான் ஆனால் எல்லா ஆண்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல...ஒரு சிலரின் அவ்வாறான ஈனச் செயலினால் நீங்கள் எல்லோரையும் தப்பாக சொல்லக் கூடாது....

  ReplyDelete
 3. நன் இங்கு விவாதத்துக்கு வரவில்லை... உன்மையே சொல்கிறேன் ஏனெனில் நானும் அதிகமாக இல்லை தினம் தினம் பஸ்களில் பிரயாணிக்கிறேன்.அந்த வகையில் அக்கா கூறியது போன்று.. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அவ்வாறான சேட்டைகளில் ஈடுபடுவதை நான் அறிந்திருக்கிறேன். அந்த அந்த வயசுகளில் பெரும்பாலானவர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடத்தான் செய்கின்றனர்

  ReplyDelete
 4. தொடர்ந்தும் எழுதுங்கள்....வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 5. ஓஓ பார்த்து விட்டீர்களா ... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும நன்றி..

  எல்லாரும் என்று நானும் சொல்லவில்லை. ஆனாலும் சிலரின் இவ் நடவடிக்கைகளினால் ஏற்படும் விளைவுகளை யாரும் யோசிப்பது இல்லை

  ReplyDelete
 6. கலை நல்ல விடயங்களை பதிவிடுகிறிங்க. உங்க பதிவுகளில் முகப்புத்தக share link இணைத்துவிட்டால்தான் உங்க பதிவுகளை எமது முகப்புத்தகத்தில் இணைத்துவிட வசதியாக இருக்கும்

  ReplyDelete
 7. அம்பலத்தார் நன்றி ஐயா,, முகப்புத்தக share link இணைப்பது பற்றி எனக்கு தெரியாது... நண்பர் ஒருவர் தான் எனக்கு இந்த blogger ஐ ஆரம்பித்து தந்தார். முயற்சி செய்து பார்க்கிறேன்....

  ReplyDelete
 8. நம் நாடுகளில்தானே நம்மவர் சிலர் இப்பிடி இருக்கினம் !

  ஏன் என்கிற கேள்வி இருக்கு.பதிலும் இருக்கு கலைவிழி !

  ReplyDelete
 9. நல்ல பதிவு கலை...
  நம் நாட்டில் அமைதியாகத்தான் சென்றாக வேண்டும்..இல்லை எனில் சகோதர மொழி தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் ஆபத்தே..

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி சிலந்தி...

  அது தான் பெருங் கொடுமை மொழி தெரிந்தால் மட்டும் எம்மால் செய்யகக் கூடியது ஒன்றும் இல்லை

  ReplyDelete
 11. எல்லா ஊர்லயும் இப்படி வக்கிரங்கள் இருக்கத்தான் செய்றாங்க....

  ReplyDelete
 12. நம்நாட்டில் அதிகம் போக்குவரத்துச் சேவையில் இருக்கும் தடைகள் தான் இப்படி பலர் ஈனச் செயல் செய்வதற்கு வசதி செய்துகொடுக்கின்ற்து என நான் எண்ணுகின்றேன்.ஜொல்லு மன்னர்களுக்கு எங்கே புரியும் பலரின் நரகவேதனையும் மனக்குறலும்.???

  ReplyDelete
 13. கொழும்புவில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இது போன்ற நாய் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இது போன்ற செயல்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்,அது மட்டுமின்றி பாலியல் பற்றிய விழிப்புணர்வு கல்வி இளம் வயதினருக்கு வழங்கப்பட வேண்டும்.

  ReplyDelete