Wednesday, October 10, 2012

தமிழர்களை தொடர்ந்தும் சின்னாபின்னமாக்கும் இலங்கை அரசு!


மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் இடம்பெயர்ந்த பெருந்திரளான மக்கள் அனைவரையும் மீள்குடியமர்த்தி விட்டதாக அரசு உலகிற்கு பெருமை பேசிக் கொண்டிடுக்கிறது. இலங்கையில் மீள்குடியேற்றம் நூற்றுக்கு ஐம்பது வீதமான அளவிற்கு கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாக பாக்குமிடத்தே தெரிகிறது.
 



பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களிற்கு பாதிப்பு எற்படும் இடத்து இடப்பெயர்வு ஏற்படுகிறது. எனினும் இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுக்கு யுத்தம் ஒன்றே காரணமாக விளங்கியது. நிலையான ஒரு பாதுகாப்பு இடமின்றி, நிம்மதியின்றி, நித்திரையின்றி, வருட, மாத இடைவெளிகளில் இடப்பெயர்வை சந்தித்தவர்கள் வடக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்.

Tuesday, October 2, 2012

சரித்திடம் படைக்கத் துடிக்கும் மொட்டுக்களை கருக்காதீர்கள்!

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இன்று சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. எனினும் இவ் வயதினருக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி பலர் கருத்திற் கொள்வதில்லை. முக்கிய பெரும் சொத்துக்களின் தினமாக இன்றைய நாள் அமையப் பெற்றிருக்கிறது. இருப்பினும் இன்றைய சிறுவர்கள் எதிர்கால தலைவர்கள். எனவே சிறுவர்கள், அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பேசலாம். 



ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் நிறைவான மனிதன் எனும் கட்டிடத்தின் அஸ்திவாரமாக அவனது இளமைக்காலம் அமைகிறது. அந்தக் காலத்தில் அவன் பெறும் கல்வி, அனுபவம், சிந்தனைகள் எல்லாம் எதிர்கால அறுவடைக்காய் விதைக்கப் பெற்ற நாற்றுக்கள்.