Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 5, 2012

நீயா ? நானா ? போட்டியில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சங்க ஒழுங்கை!

கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை, 57வது ஒழுங்கையில் கொழும்பு தமிழ் சங்கம் உள்ளது. மன்னர்கள், புலவர்கள் காலத்திலே சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டதால் "தமிழ் சங்கம்" என்ற வார்த்தைக்கு ஒரு புனிதத் தன்மை உண்டு. அந்த புனிதத்தை உணர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் வேலணை வேணியன் கொழும்பில் அது அமைந்துள்ள 57வது ஒழுங்கையை தமிழ் சங்க ஒழுங்கை என பெயர் மாற்றம் செய்ய யோசனை முன்வைத்தார். இந்த யோசனை கைகூடி வந்தவேளை பேரினவாத சதிகாரர்களால் அதற்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது.


இந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிய ஜனாநாயக மக்கள் முன்னணி கட்சி, மேல் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சிங்கள தரப்பை அழைத்து பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்தது. இந்த பேச்சுவார்த்தைக்கான ஒழுங்குகள் செய்யப்படுகிறன்ற நிலையில் புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.

Thursday, December 8, 2011

உறவுகளுக்காய் முதல் முதலில் விழித்தவை


புல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி 
நெல்லுக்கும் பொசியும் இந்த நவீன காலத்தில் 
பல நாடோடி சிற்பிகளால் செதுக்கப்பட்ட சிற்பமாய் 
என் மனம் அமைதி கொள்கின்றது 

அறிவு மட்டும் ஏனோ இவற்றை எல்லாம்
ஏற்க மறுக்கிறது – உன்
விழிகளில் விழுந்தவை - பல
விளக்குகளிற்கு ஒளியேற்றக் கூடியவை 
மனதை மடக்கி விட்டது – அறிவு