Wednesday, October 10, 2012

தமிழர்களை தொடர்ந்தும் சின்னாபின்னமாக்கும் இலங்கை அரசு!


மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் இடம்பெயர்ந்த பெருந்திரளான மக்கள் அனைவரையும் மீள்குடியமர்த்தி விட்டதாக அரசு உலகிற்கு பெருமை பேசிக் கொண்டிடுக்கிறது. இலங்கையில் மீள்குடியேற்றம் நூற்றுக்கு ஐம்பது வீதமான அளவிற்கு கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்பது வெளிப்படையாக பாக்குமிடத்தே தெரிகிறது.
 



பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களிற்கு பாதிப்பு எற்படும் இடத்து இடப்பெயர்வு ஏற்படுகிறது. எனினும் இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுக்கு யுத்தம் ஒன்றே காரணமாக விளங்கியது. நிலையான ஒரு பாதுகாப்பு இடமின்றி, நிம்மதியின்றி, நித்திரையின்றி, வருட, மாத இடைவெளிகளில் இடப்பெயர்வை சந்தித்தவர்கள் வடக்கைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்.

ஒரு சாதாரண மனித மனம் யுத்தம் நிறைவடைந்து, இனிமேல் ஒரு அமைதியான எதிர்காலத்தை எதிர் பாக்கலாம் என அமைதி கொண்டது. எனினும் அக் கனவுகூட பலருக்கு நனவாகவில்லை. இடைத்தங்கல் முகாம்கள் தொடர்ந்தும் வெந்த புண்ணில் வேல் பாச்சின.



இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றப் பணிகளை நிறைவிற்கு கொண்டு வருவதாக அரசு சவால் விட்டது. அந்தச் சவாலை சர்வாதிகாரப் போக்கில் செயற்படுத்தியும் காட்டி விட்டது. வவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாம் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி மூடப்படும் என செப்டம்பர் மாதம் 23ஆம் அறிவிக்கப்பட்டது. அதன்படியே அரசு முகாமை மூடி எஞ்சியிருந்த மக்களை காட்டிற்குள் திறந்து விட்ட மிருகங்களைப் போல் மீள்குடியேற்றம் செய்தது.

இதற்கு முன்னதாக அரசு மேற்கொண்ட மீள்குடியேற்றங்களில் அநேக குறையாடுகள் இருந்தாலும் இம்முறை இறுதிக்கட்ட மீள்குடியேற்றமே கேள்விக் குறியாகி விட்டது. தனது நாட்டு மக்களுக்கான வாழ்வாதார அடிப்படை  அம்சங்களை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசிற்கும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தாபனம் கூறுகிறது.



இலங்கையும் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் அதன்படியே மீள்குடியேற்றத்தையும் அரங்கேற்ற வேண்டிய கடப்பாடு அரசிற்கு உள்ளது. அந்த வகையில் உணவு, உடை, வீடு, பாதுகாப்பு, சுகாதாரம், தொழில் என்பவற்றை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தே மீள்குடியேற்றம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இறுதியாக இலங்கை அரசால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட மீள் குடியேற்றத்தில் ஒரு கட்டிடம் கூட இருக்கவில்லை என்பது  அரசின் பாரபட்சத்தை அபட்டமாக வெளிப்படுத்தி விட்டது.


 

யுத்தம் முடிவடைந்து 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னராக மெனிக்பாம் முகாமில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் எஞ்சியிருந்த முல்லைத்தீவு, கேப்பாபிலவு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 110 குடும்பங்கள் சீனியாமோட்டை என்ற இடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். தம்மை சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுமாறு இப்பகுதி மக்கள் இரு மாதகாலத்திற்கு முன்னர் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். முகாமிலிருந்து வெளியேறும் போது தமது சொந்த இடத்திற்கே போகிறோம் என்ற கனவில் இவர்கள் தமது பயணத்தை தொடங்கினர்.



எனினும் பாதி வழியில் கனவு கலைந்தது. காட்டுப் பகுதியில் மீள்குடியேற்றம் நிகழ்ந்தது. இம்மக்களுக்கு போதிய தண்ணீர் வசதியோ, கழிவிட வசதிகளோ  செய்து கொடுக்காத நிலையில் அவர்கள் அநாதரவாக விடப்பட்டனர்.








முகாமில் இருந்து கொண்டு வந்த மரம், தடிகள், தகரங்கள் என்பற்றைப் பயன்படுத்தி தாங்களே முயற்சி செய்து கொட்டில்களை அமைத்துக் கொண்டனர்.




இவர்களுக்கான தண்ணி வசதிகூட உரியவகையில் அமைத்துக் கொடுக்கவில்லை எனும் போது அம் மக்களின் மனநிலையில் இருந்து ஒரு நிமிடம் கூட சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் என இலங்கை அரசு அறிவித்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தி இருந்தது. எனினும் அதனை பின்பு வாபஸ் வாங்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இது இப்படியிருக்க வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில்  1999 ஆம் ஆண்டுஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியிலிரு இன்றுரை பல மக்கள் வாழ்கின்றனர். இவர்ளைப் பற்றி அரசோ, அரசியல் கட்சிலோ, ஊடகங்ளோ கண் துறந்து பார்க்கவில்லை.







கிளிநொச்சிமுல்லைத்தீவு  மற்றும்  வவுனியா  மாவட்டங்களைச்  சேர்ந்த சுமார்  134  குடும்பங்கள்  இடம்பெயர்ந்து  இந்த முகாமில் தங்கியுள்ளனர். கடந்த  மூன்று  மாதங்களுக்குமுன்னரே இவர்களுக்கான  நிவாரண  உதவிகள்  யாவும் நிறுத்தப்பட்டு விட்டன. இந்த நிலையில்உழைத்துப்  பெறும்  சிறிதளவு  வருமானத்தில்  தமது  வாழ்க்யை  நடத்தி வருகின்றனர்.





வன்னிப்  பகுதியிலிருந்து  இடம்பெயர்ந்த  அனைவரும்  தமது சொந்த  இடங்ளில்  மீள்குடியமர  வேண்டும் என்ற  அரசாங்கத்தின்  கொள்கைக்கமைய  இவர்களை  முகாமிலிருந்து  வெளியேறுமாறு  மாவட்டச்  செயலகம்  அறிவித்துள்ளது.


எனினும்தமக்கு  அங்கு  சொந்தக்  காணிகள்  எதுவும்  இல்லை என்றும்இப்போது  அங்கு  மீள்குடியேறச் சென்றால்  தமக்கான  வசதிகள்  உரிய  முறையில்  செய்துதரப்படுமா  என்று  பயம் கொண்ட மக்கள்  தொடர்ந்தும் இங்கேயே  தங்கியுள்ளனர்.  இவர்கள் தமக்கு வவுனியாவில்  வீடமைத்து தரும்படி  அரசை  வேண்டி நிற்கின்றனர். இவர்களை யாரும் இலங்கை மக்கள் என்ற அடிப்படைக்குள் அடக்கவில்லை போலும்!

இந்நிலையில் முகாம் என்ற சொல்லை இலங்கை அகராதியில் இருந்து அழித்து விட்டதாக அரசு சொல்வது எந்தளவிற்கு உண்மை. சர்வதேசத்தினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கண்களிற்கு இந்த கொடுமைகள் தென்டாதா?








6 comments:

  1. என்ன் சொல்வது ஒரு நாடு இரு தேசம் என்பதை ஜனநாயக குடியரசு ஏற்றுவிட்டது போல!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இது இப்படியிருக்க வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இன்றுரை பல மக்கள் வாழ்கின்றனர். இவர்ளைப் பற்றி அரசோ, அரசியல் கட்சிலோ, ஊடகங்ளோ கண் துறந்து பார்க்கவில்லை.//இது நான் கடந்து வந்த பாதை ஏன் பதிவுகலம் கூட் பதிவு செய்யவில்லை நொந்து போன இதயம் கேட்ட தொடர் பலரைப்பார்த்து!ம்ம் வாழும் சாட்சி தனிமரம்!ம்ம்

    ReplyDelete
  4. வவுனியாவில் வீடமைத்து தரும்படி அரசை வேண்டி நிற்கின்றனர். இவர்களை யாரும் இலங்கை மக்கள் என்ற அடிப்படைக்குள் அடக்கவில்லை போலும்!//ம்`ம் அந்த கிராமம் வன்னி மாவட்டம் அனுராதபுரம் தொகுதிக்கு வராமல் இருந்தால் நல்லது என்பது என் தனிப்பட்ட ஆலோசனை!ம்ம் நல்ல ஒரு சமுகப்பார்வை !ம்ம்

    ReplyDelete
  5. என்ன செய்யப்போகிறோம் ...மக்களுக்காக, கையறு நிலையில்
    முடியவில்லை ......காலகாலமாக எங்களுக்கு இதுதான் நிலையென்றால்
    என்ன பழி செய்தோம்.யாரை நோவது ...............
    வெளிச்சத்துக்கு வரவேண்டிய பதிவு .

    ReplyDelete
  6. வலிமிக்கதுதான் விழியில் விழுந்துள்ளது...
    என்ன சொல்வது தீய சக்திகள் நாட்டையோ அல்லது வீட்டடையோ ஆளும் போது அதனைப் போக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அச் சக்திகள் எல்லோருக்கும் கேடே விளைவித்துவிடும்

    காலம்தான் பதில் சொல்லனும்
    காலம் பதில் சொல்லும்...

    ReplyDelete