Wednesday, January 16, 2013

ரிஸானாவின் மரணதண்டனையில் சாதித்தது என்ன ?


"ரிஸானா நபீக்" இன்றுடன் ஒரு கிழமையாக அனைவர் வாயிலும் உச்சரிக்கும் ஒரு நாமமாக மாறிவிட்டது. ரிஸானா அவள் எம்மைவிட்டு மறைந்தாளும் அவளது இழப்புக் குறித்த பேச்சுக்கள் இப்போதைக்கு மறையப் போவதில்லை. ரிஸானாவிற்கான தண்டனை குறித்து பெருமைகொள்ளும் ஒரு கூட்டமும், கண்டனங்களை தெரிவிக்கும் மற்றுமொரு கூட்டமும் இன்றும் கூச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றன.


இதுரை நான், எந்தவொரு மதம் குறித்தோ சமூகம், இனம் குறித்து பேசியதோ, முக்கியத்துவம் கொடுத்தோ இல்லை.  ஆனாலும் ரிஸானாவின் படுகொலை, அவளது முயற்சி மரணித்தமை என்னை கண்கலங்க வைத்துவிட்டது.  மதத்தை மட்டும் வைத்துக்கொண்டு கூச்சலிடும் யாரும் தயவுசெய்து இந்த கட்டுரையை தொடர்ந்து வாசிக்கவேண்டாம். உணர்வுள்ள மனிதர்கள் மட்டும் வாருங்கள் பேசலாம்.

ரிஸானாவிற்கு அறியா வயதில் செய்த தவறுக்காய் கொடூர தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதையும் ஒரு மதம்சார் சட்டம் வழங்கியிருக்கிறது. பழையன களைதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம். அப்படி இருக்க சட்டங்களும் காலத்திற்கு அவசியத்திற்கு ஏற்றாடபோல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொலைக்கு கொலை, இரத்தத்திற்கு இரத்தம் இதைத்தான் ஒரு மதம் போதிக்கிறதா என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஷரீ ஆ சட்டத்தை பார்க்கும்போது இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவாக அமையவேண்டும். ஆனால்  ஷரீ ஆ சட்டம் பாதிக்கப்பட்டவர் பக்கமிருந்தே வழக்கை பார்க்கிறது.

பணிப்பெண்ணாக ரிஸானா சென்று இரண்டு வார காலப்பகுதியில் இடம்பெற்ற நான்கு மாத குழந்தையின் மரணம் அவளால் கூட தாங்கிக்கொள்ள முடிந்திருக்காது. 17 வயதுச் சிறுமியாக இருந்த ரிஸானாவிற்கு இன்னொரு குழந்தையை பார்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ரிஸானா குழந்தைக்கு பால் பருக்கும் வேளையில் குழந்தை இறந்திருக்கிறது என கூறப்படுகிறது. இவ்வாறான கோணத்தில் பார்த்தால் கூட அது ஒரு திட்டமிட்ட கொலை கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்யப்பட்ட கொலைக்கு கூட மன்னிப்புக் கிடைக்கிறது. அந்த குழந்தையின் தாய் கூறியது போன்று அவதானித்தால், அந்த செற்பநேரத்தில் ரிஸானா பிள்ளையின் கழுத்தை நெரித்திருந்தாலும் அது ஒரு திட்டமிட்ட கொலை கிடையாது. தனது இயலமையினால் ரிஸானா அந்த வினாடிகளில் அப்படிசெய்திருந்தாலும் அவள் ஒரு சிறுமி என்பதை ஏன் அந்த தாயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை விடுத்து ரிஸானா குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு முன்வரோதம் ஒன்றும் கிடையதே.


ஷரீ ஆ சட்ட வழியலேயே நாமும் பார்க்கப் போனால் நான்கு மாத குழந்தை பார்க்கும் பொறுப்பு பெற்ற தாய்க்கே உரியது என அச்சட்டம் கூறுகிறது. ஒன்றரை முதல் இரண்டு வயது வரை குழந்தைளை வளர்க்கும் பொறுப்பு பெற்ற தாய்க்கு உரியது என சட்டம் சொல்கிறது. அதேபோல் நான்கு மாத குழந்தைக்கு இந்தக் காலத்தில் கூட பால்மா கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்க 2005ஆம் ஆண்டு சம்பவம் நடந்தபோது ஏன் போத்தல் பால் கொடுக்கப்பட்டது ? அப்படி என்றால் அந்த நீதிமன்றம் தனது பெற்ற பிள்ளையை பார்க்க தவறிய அந்த தாய்க்கு என்ன தண்னை வழங்கியது.

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது சகோதரர்களை நல்ல நிலமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும் ரிஸானா எடுத்த முடிவு அவளது எதிர்காலத்தையே சமாதியாக்கி விட்டது. இல்லை! நமது நாடும் அரசின் கைக்கூழிகளாக திரியும் முஸ்லிம் காங்கிர்ஸும் அவளைக் கொன்று புதைத்து விட்டன. அரச  தரப்பில் இருந்துகொண்டு தனது சமூக ஏழைப் பெண்ணிற்கு ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு தங்களால் எந்தவித ஒத்தழைப்பையும் வழங்க முடியாது இன்றுரை வாய்ப் பூட்டுபோட்ட பாம்புகளாக அடங்கி இருப்பதால் யாருக்கு என்ன பலன். தமது இருக்கைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு மட்டமே அவர்களது கைகளும் வாய்களும் செயற்படுகின்றன. மதத்தை மட்டும் பார்க்கும் மக்கள் கூட்டத்தால் இவர்களது அரசியல் உயிர் இன்றுரை காப்பாற்றப்படுகிறது. எதிர்காலத்திலும் இந்நிலை இப்படியேதான் இருக்கும்.


ரிஸானாவின் குடும்பம்

2005ஆம் ஆண்டு மே மாதம் ரிஸானா கைது செய்யப்பட்டிருக்கிறாள். இவ்விடயம் குறித்து அவ்வாண்டு இறுதியில் இலங்கை அறிந்திருக்கிறது. ஆனாலும் இந்த விவகாரத்தை இலங்கை பொருட்படுத்தவில்லை. 2007ஆம் ஆண்டு ரிஸானாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்மையின் பின்னர்தான் ரிஸானா குறித்து இலங்கை தனது கடைக்கண் பார்வையை செலுத்தியது. சட்ட ரீதியாக பார்க்குமிடத்து காலம் கடந்து விட்டது. தண்டனை விதிப்பதற்கு முன்பே இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தி இருந்தால் ரிஸானவை தண்டனையிலிருந்து காப்பாற்றி இருக்கக் கூடும். ரிஸானா விடயத்தில் இலங்கை அரசு சார்பில் இழைக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய பிழை இது.

                                                              
                                                                ரிஸானாவின் வீடு 



ரிஸானா விடயத்தில் இலங்கை அரசு இழைத்த முதலாவது மிகப்பெரிய பிழை சிறுமியை வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிமை. சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் கொண்டு ரிஸானவை பணிப்பெண்ணாக முகவர்கள் அனுப்பியுள்ளனர். இலங்கையின் சட்டவலுவின்மை இங்கே எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு தன்னகத்தே பிழையுள்ள இலங்கை எவ்வாறு சவுதி அரேபியாவிடம் அவள் ஒரு சிறுமி மன்னித்து விடுங்கள் என கேட்க  முடியும். எனவே இலங்கை வாய் மூடிவேடிக்கை பார்த்தது. ரிஸாவை சவுதிக்கு அனுப்பிய முகவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால்  ரிஸானா சிறுமியாக இருக்கும் போது பணிப்பெண்ணாக சென்றுள்ளார் என்தை இலங்கை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.

ரிஸானா குறித்து முஸ்ஸிம் காங்கிரஸ் இன்னுரை ஒரு அடயேனும் எடுத்து வைக்கவில்லை. சவுதி இளவரசி வழங்கிய பணத்தை வாங்கி ரிஸானாவின் குடும்பத்திற்கு கொடுக்கிறது. சவுதி மீது இலங்கை கண்டனம் தெரிவித்திருந்தால் அந்த பணத்தை மறுத்திருக்க வேண்டாமா? இலங்கை அரசு அவளது குடும்பத்திற்கு வீடமைத்துக் கொடுக்கலாம். இப்போது ஆர அமர யோசித்து ரிஸானா குடும்பத்திற்கு வீடமைத்து கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். முன்னதாக ஆரியவதி என்ற சிங்கள பணிப்பெண் ஆணி ஏற்றப்பட்டு துன்புறுத்தப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்மை குறித்து உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பெண் வைத்தியசலையில் சிகிச்சைபெற்று திரும்பும் முன் அவளுக்கான வீமைப்பு முடிந்து விட்டது. அவளுக்கான வீட்டை பொருளாதார அபிவித்தி அமைச்சின் நேரடி தலையீட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இச் சம்பவம் 2010ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெற்றது. அமராவதிக்கு நிவாரணம். ரிஸானாவிற்கு சமாதி!


உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் கோரிக்கை முன்வைப்பது, தண்டனை நிறைவேற்றும் தினம் அறிவித்த பின் மீண்டும் ஒருமுறை சவுதி மன்னரிடம் கோரிக்கை முன்வைப்பது எல்லாம்வெறும் அரசியல் நாடகம். இந்த அரசியல் கதிரை ஆடாமல் இரண்டு பக்க கால்ளை பிடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தமது சுயநலத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க தயாரில்லை. ஆனால் எத்தனை ரிஸானாக்களையும் பலிகொடுக்க தயாராவே இருக்கிறது.


ரிஸானாவின் உயிரைக் காப்பாற்ற தவறிய முழுப் பொறுப்பையும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. ரிஸானாவின் வழக்கு குறித்து மேன்முறையீடு செய்வதற்கான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை எனவும் அவ் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதுவே ஒரு ஆரியவதியாக இருந்திருந்தால்......?

உங்கள் வழியிலேயே நானும் ஒரு கேள்விகேட்கிறேன், சமய ரீதியில் பல கட்டுப்பாடுளைபேணும் முஸ்லிம்கள், ஒரு பெண்ணிற்கான ஒழுக்கங்கள், கடும் கட்டுப்பாடுளை இன்றுரை பேணுகின்றனர். அப்படி என்றால் பணிப்பெண்களாக உங்கள் வீட்டுபெண்ளை அனுப்பாது உங்கள் வீட்டு மகாராணிகளாக மட்டும் வைத்துக் கொள்ளலமே. ஏழைக் குடும்பங்களுக்கும் மேல்மட்ட குடும்பங்களுக்கும் மார்க்கத்தில் ஒரே விடயங்கள் தானே குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் மார்கத்தின் பெயரால் ஏழைக் குடும்பங்ளை நீங்களும் ஏற்றி விடுங்கள். இனிமேலும் அவர்களை பணிப்பெண்களாக செல்ல அனுமதிப்பீர்கள் ?


ரிஸானாவின் தாயார் அவளுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஒருபோதும் அவர் மனதார ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். பிறிதொருநாள் ரிஸானாவின் தாய் வழங்கிய பேட்டியில் என் மகள் எனக்குவேண்டும் என தெரிவித்திருந்தார்.             

யாரால் முடியும் அந்த ஏழைத் தாய்பெற்று 17 வருடங்கள் வளர்த்து, அவளது குடும்பத்திற்காக சமாதியாகிப்போன மகளை திரும்பிக் கொடுக்கா, அந்த ஏழைக் குடிசையில் மகிழ்ச்சி ஔி வீச வைப்பதற்கு யாரால் முடியும் ?    


5 comments:

  1. அந்தச் சின்னக் குருத்தை திருப்பிக் கொடுக்க யாராலும் முடியாது!///இப்போதும் கட்டாரில் ஒரு இளைஞர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.வெறும் இலங்கை ரூபாய் முப்பத்தைந்து இலட்சம் கொடுத்தால் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறதாம்,உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும்,தங்கள் நாட்டுப் பிரஜைகளுக்கு பிறிதொரு நாட்டில் இன்னல் நேர்ந்தால்,ராஜ தந்திர முறையில் அணுகி தீர்வு காண்கின்றன.(அது தீவிரவாதிகளின் கடத்தல் காரணமாயினும் சரி)இங்கு ஆட்சி புரிவோர் மனசாட்சி உடையோராய் இருத்தல் வேண்டுமே?

    ReplyDelete
  2. கொடுமை....சொல்ல வேறு ஏதுமில்ல கலை.சட்டத்தின் பெயரில் பாவம் செய்தால் தப்பில்லையாம்.ஈழத்திலும் அதே பாவமன்னிப்பு கதை உண்டுதானே !

    ReplyDelete
  3. மன்னிக்க முடியாத செயல் இந்த தீர்ப்பும் அரசியலும்.பாவம் ஒரு அப்பாவி பணிப்பாவை.கடவுளின் பேரில் ஒரு பலி .ம்ம்ம்கொடுமை இது.

    ReplyDelete
  4. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  5. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

    ReplyDelete