Saturday, April 21, 2012

வெளிநாடுகளில் நம்மவர்களின் தில்லு முள்ளுகள்

உலகின் எல்லா மூலைகளிலும் தன் பெயரை பதித்துள்ள இலங்கைத் தமிழன் தன் தனித்துவத்தையும் பதிக்காமல் இல்லை. கல்விக்குப் பெயர்போன யாழ் மண், யாழ்ப்பாணத்தான் இப்போது தனது பெயரை விசித்திரமாக பல சாதனைகளை புரிந்து பதித்துள்ளான். 


தழிழன் என்றொரு இனம் உண்டு. அதற்கு தனிச் சிறப்புண்டு என்று தமிழர்களை போற்றி தலையில் துக்கி வைத்துள்ளது இந்த உலகம். நல்ல செயல்களால் தன்னை அலங்கரித்துக் கொண்ட தமிழன், இப்போது உலகில் உள்ள கள்ள வேலைகள் அனைத்தையும் செய்து தன் இனத்தின் தனித்துவத்தை விற்று வருகிறான். 


வெளிநாடு சென்றுள்ள நம்மவர்கள் ஒருசிலர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அங்கு நேர்மையாக முன்னுக்கு வரும் இளைஞர்கள் மத்தியில் பலர் பல்வேறுபட்ட பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை மறுக்கமுடியாது. இவ்வளவு பில்டப்பையும் பாத்து கொடூரமா பதிவை வாசிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல..............




ஆனால் நாங்கள் இங்கு விசித்திரமான ஒருவிடயம் பற்றித் தான் பேசப்போகிறோம். வெளிநாட்டிலுள்ள நம் இளைஞர்களது தந்திர புத்தி பற்றித் தான். தம் சக்திக்கு அப்பாற்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிவதற்காக அவர்கள் கையாளும் தந்திரம் உங்களுக்குத் தெரியுமா?


இவ்விடயம் தொடர்பில் உண்மைச் சம்பவங்கள் சிலவற்றை உங்களுக்காக கூறுகிறேன். இவை கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றவை.  


ஒரு ஆடைக்கடைக்கு சென்ற யுவதி ஒருவர் விலையுயர்ந்த மேல்ச் சட்டை ஒன்றையும் அதனுடன் இணைந்ததான கோட் ஒன்றையும் வாங்கினாள். வாங்கும் போதே அவளுக்கு தெரியும் இவ் ஆடை தனது பொருளாதாரத்துக்கு அதிகமானது என்பது. எனினும் அதனை தெரிவு செய்து எடுத்து விட்டு, பில் போடும் போது அவர்களிடம் “இந்த கோட்டை இன்னுமொரு சேட்டுக்காகவே வாங்குகிறேன், அதற்கு பொருத்தமாக இல்லாது விடின் மீண்டும் நாளைக்கு எனக்கு நேரம் இல்லை. நாளை மறுதினம் வந்து மாறுகிறேன்” என தெரிவித்து பெற்றுச் சென்றாள்.


மறுநாள் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றிற்கு அந்த ஆடைகளையே அப்பெண் அணிந்து சென்றாள். அழகான விலையுயர்ந்த ஆடையணிந்து சென்றவள் பக்கம் அனைவரினதும் பார்வை திரும்பியது என்னமோ உண்மைதான். 



விருந்து முடிந்தவுடன் அந்த ஆடைகளை பத்திரமாக வாங்கிய போது எவ்வாறு இருந்ததோ அதைப் போலவே பொதி செய்து மறுநாள் அந்த கடைக்கு எடுத்தச் சென்றாள். “இந்த கோட் எனது சேட்டுக்கு சரிவரவில்லை” எனக் கூறி மாற்றினாள்.


இப்படி ஆடைகளை மாற்றுவதில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தமது பங்களிப்பை வளங்கத் தான் செய்கிறார்கள். ஒவ்வொரு கற்கை நெறிகளின் பின்னதாகவும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் மிக விமர்சையாக நடப்பது வழக்கம். அந்நிகழ்விற்கு மாணவர்கள் கௌரவமாக ஆடையணிந்து அழகாகச் செல்வர்.


இந்நிகழ்விற்கு அவர்கள் தெரிவு செய்யும் மேலாடையின் பெறுமதி அதிகமாம். இதன் காரணமாக நிகழ்ச்சிக்காக ஆடையை தெரிவு செய்து அணிந்து விட்டு பின்னர் கடையில் கொடுத்து மாற்றிவிடுவார்களாம்.


மேற்சட்டை மட்டும் இல்லை பாதணிகளையும் இவ்வாறு அணிந்து விட்டு மாற்றிவிடவார்கள். பெண்கள் தாம் அணியும் ஆடைகளின் நிறத்திற்கு ஏற்ற பாதணிகளை அணிவர். ஆனால் அந்த பாதணிகள் அன்றாட பாவனைக்கு உகந்ததாக இருக்காகது.





இதனை யோசித்தோ என்னவோ வெளிநாட்டில் உள்ள சில பெண்கள் பார்ட்டிகளிற்கு அணிவதற்காக விலையுயர்ந்த அழகிய பாதணிகளை வாங்கி அணிந்துவிட்டு பின் மாற்றிவிடுகின்றனர்.


அந்த கடைக்காரர்களை விட, இவர்கள் அணிந்த ஆடைகளையும், பாதணிகளையும் மீண்டும் வாங்கும் நபர்களை என்னவென்று சொல்வது. இத்தகைய சம்பவங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் மட்டும் அல்ல பலர் ஈடுபடுகின்றனர்.


ஏன் இலங்கையில் கூட நடைபெறலாம். ஆனால் இலங்கையில் பெரும் பாலும் இவ்வாறு பொருட்களை மாற்றுவது அவ்வளவிற்கு சாத்தியம் அல்ல. இதனால் நம் இளைஞர் யுவதிகளை குறை கூறுவதற்கு நான் வரவில்லை. இச்சம்பவங்கள் உண்மையாக இடம்பெற்றவை. சிலரின் அனுபவங்கள். 

17 comments:

  1. உள்குத்தல் ஏதும் இருக்கு என எனக்குத் தோனுகிறது............
    எதுக்கும் மணிஅன்னாட ட்ரஸ்கள பாக்க வேனும்...

    ReplyDelete
  2. நல்ல பதிவு...நடைமுறையில் உள்ளதுதா. இலங்கையிலும் இருக்கின்றது...எனக்குத்தெரிந்த ஒரு சிலர் இலங்கையிலும் செய்கின்றனர்...

    ReplyDelete
  3. உள்குத்தல் ஏதும் இருக்கு என எனக்குத் தோனுகிறது............
    எதுக்கும் மணிஅன்னாட ட்ரஸ்கள பாக்க வேனும்...//////


    உங்கள் எண்ணம் பிழையானது. இந்த பதிவை நான் எழுத ஆரம்பித்தது போன மாத கடைசியில்.......

    பெய்களையோ..... யாரையும் குறிப்பிட்டொ பதிவு போடும் எண்ணம் எனக்கில்லை............

    முதலிலேயே சொல்லியிருக்கிறேன்.. பதிவு போட வேண்டும் என்பதற்காக பதிவிடுபவள் நானில்லை

    ReplyDelete
  4. பதிவிடுவதற்கு விடயங்கள் இருந்தாலும் அதனை வலைப்பதிவில் கொண்டு வருவதற்கு எனக்கு குறைந்தது இரண்டு கிழமைகளாவது தேவைப்படுகிறது..

    ஒரு பதிவு போடுவதற்கும் 100 கொமண்ட் போடலாம் போல இருக்கு....

    இலகுவான வழி ஏதும் இருந்தா சொல்லுங்கோ பாம்பம்

    ReplyDelete
  5. தலை குனிவைத்தரும் செயல்

    ReplyDelete
  6. சகோதரி கலைவிழி
    உங்களுடைய இந்த பதிவு
    நுகர்வியப் பண்பாட்டிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் எனும் விடயத்தை சுட்டி நிற்கிறது வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. எங்கள் நாட்டின் மதிப்பை கெடுக்கும் செயல்.... புட்டு புட்டு வைத்ததற்கு நன்றி கலை.....

    ReplyDelete
  8. யாரோ ஒரு சிலர் செய்ததை வைத்து மற்றவர்களையும் எடை போடக்கூடாது..!!
    நாம் ஒரு பொருளை வாங்கி பிடிக்கவில்லை என்றால் திருப்பி கொடுப்பது தவறு இல்லைத்தானே?

    ReplyDelete
  9. ஒரு ஆடைக்கடைக்கு சென்ற யுவதி ஒருவர் விலையுயர்ந்த மேல்ச் சட்டை ஒன்றையும் அதனுடன் இணைந்ததான கோட் ஒன்றையும் வாங்கினாள். வாங்கும் போதே அவளுக்கு தெரியும் இவ் ஆடை தனது பொருளாதாரத்துக்கு அதிகமானது என்பது. எனினும் அதனை தெரிவு செய்து எடுத்து விட்டு, பில் போடும் போது அவர்களிடம் “இந்த கோட்டை இன்னுமொரு சேட்டுக்காகவே வாங்குகிறேன், அதற்கு பொருத்தமாக இல்லாது விடின் மீண்டும் நாளைக்கு எனக்கு நேரம் இல்லை. நாளை மறுதினம் வந்து மாறுகிறேன்” என தெரிவித்து பெற்றுச் சென்றாள்///

    செம காமெடிபோங்க !!! காடைக்காரன் என்ன இழிச்ச வாயனா இப்படி கொடுக்க???

    ReplyDelete
  10. தழிழன் என்றொரு இனம் உண்டு. அதற்கு தனிச் சிறப்புண்டு என்று தமிழர்களை போற்றி தலையில் துக்கி வைத்துள்ளது இந்த உலகம்.///

    சொல்லவே இல்ல :)

    ReplyDelete
  11. ஏன் இலங்கையில் கூட நடைபெறலாம். ஆனால் இலங்கையில் பெரும் பாலும் இவ்வாறு பொருட்களை மாற்றுவது அவ்வளவிற்கு சாத்தியம் அல்ல.///

    இலங்கையில் மட்டும் இல்ல வேறு எந்த நாடுகளிலும் இவ்வாறு நடத்திருக்க வாய்ப்பே இல்லை:) (அதாவது பணம் கொடுக்காமல் பொருளை எடுத்து செல்ல அனுமதி இல்லை)

    ReplyDelete
  12. இராஜராஜேஸ்வரி said...

    தலை குனிவைத்தரும் செயல்/////

    உண்மை தான்

    ReplyDelete
  13. @ ஹைதர் அலி வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  14. எங்கள் நாட்டின் மதிப்பை கெடுக்கும் செயல்.... புட்டு புட்டு வைத்ததற்கு நன்றி கலை......
    ஆனால் யாரும் நம்பிராங்க இல்லையே

    ReplyDelete
  15. @ காட்டான் காட்டான்

    யாரோ ஒரு சிலர் செய்ததை வைத்து மற்றவர்களையும் எடை போடக்கூடாது..!!
    நாம் ஒரு பொருளை வாங்கி பிடிக்கவில்லை என்றால் திருப்பி கொடுப்பது தவறு இல்லைத்தானே?////

    நானும் அதைத் தான் பதிவின் ஆரம்பத்திலிருந்து சொல்லியிருக்கிறேன்.... எல்லாரும் அப்படியல்ல... ஒருசிலர் இருப்பதனை மறுக்கவும் முடியாது.............

    பிடிக்காவிட்டால் மாற்றத்தான் வேண்டும்... ஆனால் ஒரு பொருளைப் பெற்று அதன் தேவை முடிந்த பின் மாற்றுவது சரியா

    ReplyDelete
  16. @ கந்தசாமி.....

    பொருளை காசு கொடுக்காமல் அவர்கள் வாங்கியதாக நான் சொல்லவில்லையே.......... பொருட்களை வாங்கினார்கள் என்றால் பணம் இன்றி எப்படி....

    கடனுக்கு கொடுக்க மாட்டார்கள்..........

    ReplyDelete
  17. யாழ்ப்பாண தமிழனா இவ்வாறு செய்கிறான்??

    ReplyDelete