Tuesday, March 13, 2012

காரைநகரானின் திருமணத்தில் கோடிகள் படும் பாடு

யாழ் மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் ஏழு தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சப்த தீவுகள் என கூறுவர். காரைநகர், வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவை தீவு, மண்டை தீவு என்பனவே இந்த சப்த தீவுகள். ஏனைய தீவுகளை விடவும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருப்பது காரைநகர் ஆகும். காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடைய தீவு.



இங்கு அதிகமான காரைச் செடிகள் இருந்தமையின் காரணமாக காரைநககர் என பெயர் வந்ததாக கூறுவர். காரைநகர் வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகளைக் கொண்டுள்ளது.



காரைநகரில் உலகப் புகழ் பெற்ற ஈழத்துச் சிதம்பரம் மற்றும் வியாவில் ஐயனார் கோவில் என்பவற்றோடு 8 பிள்ளையார் கோவில்கள், 13 அம்மன் கோவில்கள், 8 முருகள் ஆலயங்கள், 6 வைரவர் ஆலயங்கள், ஒரு முனியப்பர் கோயில், மல்லிகை சேவகர் கோயில் என மொத்தமாக 39 கோயில்கள் உள்ளன.



இவ்வளவு கோயில்கள் உள்ள ஊரில் இரண்டு கல்லூரி தர பாடசாலைகள், இரண்டு வித்தியாலயங்கள், 6 ஆரம்ப பாடசாலைகள், 14 முன்பள்ளிகள் தான் இருக்கின்றன.

இந்த தீவைச் சேர்ந்த மக்கள் உலகின் பல பாகங்களிலும் வசிக்கின்றனர். அதற்கு எடுத்துக் காட்டாக "காக்கை கரையாத இடமும் இல்லை காரை தீவான்  இல்லாத இடமும் இல்லை" என்ற பழமொழியும் இருக்கிறது. 

காரைநகர் மக்களுக்கும் இன்னும் அரிய பல பெருமைகளும் உள்ளன. ஆம் யாழ்ப்பாணத்தில் அதிக சீதனம் வாங்குபவர்கள் காரைநகரைச் சேர்ந்தவர்கள். வடக்கின் பெரும்பாலான வர்த்தகர்கள் காரைநகரைச் சேர்ந்தவர்கள். என்றாலும் எவ்வளவு தான் பணம் இலுந்தாலும் கோடி கோடியாக வரதட்சணை வாங்குவது இவர்களது வழக்கமாக உள்ளது. 



வரதட்சணை வாக்குவதனை இவர்கள் ஒரு கௌரவமாகவே நினைக்கின்றனர். வீடு, நகை, பணம், இனாம் இவை மணமகளின் வீட்டாரிடமிருந்து பெறுவதில் மணமகன் வீட்டாரிற்கு ஒரு இன்பம்போலும். 

மாப்பிள்ளை வெளிநாடாக இருந்தாலும் உள்நாடாக இருந்தாலும் இந்த அடிப்படை வரதட்சணையில் எதுவும் குறையாது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் வீடு வேண்டாம், அதை விற்று மகளின் பெயரில் காசை போட்டு விடுங்கோ என்று நாக்கு கூசாம சொல்வார்கள். ஏதோ தாங்கள் வாங்கிக் கொடுத்த மாதிரி. 



இந்த விபரபட்டியல் இணையத்தளங்களிலும் பேஸ்புக்கிலும் இவ்வாண்டு பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிய ஆக்கத்துடன் இவ் பட்டியலும் இணைக்கப்பட்டு செய்தி இணையத்தளங்களின் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

முன்பு காரைநகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக வரதட்சணை வாங்கினர். பின்னர் இதுவும் ஓர் தொற்று நோய் போல் ஏனைய தீவுகளுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் பரவி பெரும் பூதாகரமாக மாறியுள்ளது. 

ஆண்களைப் பெற்ற காரைநகர் அம்மாக்கள் படும் பாடு இருக்குதே. சொல்லவே தேவையில்ல இலங்கை அரசைப் போல தான் அவர்களும். இவர்கள் நினைத்தால் யாழ்ப்பாண பெண்கள் பலர் திருமணமாகாமல் கன்னியாகவே இருந்து இறக்கும் நிலையை தவிர்க்கலாம். 



யாழ்ப்பாத்தில் பல பிள்ளைகள் தாய், தந்தையரை இழந்து தவிக்கின்றனர். சிறுவர்கள், முதியவர்கள் என பலர் நோயால் அவதியுறுகின்றனர். யாழ் போதனா வைத்தியவாலை நோயாளர்களால் நிறம்பி வளிகிறது. இலங்கையின் அதிக புற்றுநோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகிறது. 

யாழ்ப்பாண பிரச்சினைகளும் கரைநகர் வர்த்தகர்களும் தொடர்பில் யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. 

இவர்களிடம் இருக்கும் பணத்தில் இவற்றை செய்வது பெரிய விடயமே இல்லை. கோடிக் கணக்கில் வரதட்சணை வாங்குவதையும் கொடுப்பதையும் விடுத்து இவற்றிலும் இந்த பணந்திண்ணிகளின் கவனம் திரும்புமா ?

13 comments:

  1. மாப்பிள்ளை வெளிநாடாக இருந்தாலும் உள்நாடாக இருந்தாலும் இந்த அடிப்படை வரதட்சணையில் எதுவும் குறையாது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் வீடு வேண்டாம், அதை விற்று மகளின் பெயரில் காசை போட்டு விடுங்கோ என்று நாக்கு கூசாம சொல்வார்கள்.//

    உடம்பே கூசாதவங்களுக்கு நாக்கு எங்கே கூசப்போகிறது. ஆடு மாட்டை விலைக்கு விற்பார்கள் ஆனால் பல இடங்களில் ஆடவர்களை விற்கிறார்கள்.. எல்லாம் கோலம்..

    நல்லதொரு பதிவு..

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    நிறைய புதிய விடயங்களை தெரிந்துக் கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. கோடிகளில் பிறந்த வியாபாரிகள் தங்கள் பிள்ளைகளையும் வியாபாரப்பொருள் ஆக்கிவிட்டார்கள் என்று புலம்பும் உங்கள் பதிவு பார்த்து ரசித்தேன் .சீத்னத்தை தொடங்கி வைத்தவன் இன்னொரு தீவு மக்கள் தான் முதலில் சகோதரி.புகையிலைக்கு இவர்கள் சொல்லடி வரும்!

    ReplyDelete
  4. @ அன்புடன் மலிக்கா ம்...... மானம் மரியாதை பார்த காலம் எல்லாம் போய்விட்டது... உங்கள் வரவுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. @ ஹைதர் அலி, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... நிறைய புதிய விடயங்களை தெரிந்துக் கொண்டேன் ///// மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  6. @ தனிமரம், நன்றி சீதனத்தை ஆரம்பித்து வைத்த தீவார் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கிறது.... அப்படியாயின் ஒரு பதிவை போடலாமே

    ReplyDelete
  7. அன்புச் ச​கோதரிக்கு வணக்கம்,

    இந்தியாவில் 498ஏ என்னும் வரதட்ச​ணை எதிர்பு சட்டமிருக்கின்றது ஆனால் அந்த சட்டத்​தை தவறாகப் பயன்படுத்தி பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றது எங்கள் நாட்டில்.. ஓய்விருந்தால் கீழ்கண்ட வ​லைப்பூ​வை படித்துப்பார்கவும்...

    http://ipc498a-victim.blogspot.com

    ReplyDelete
  8. ponkade velajaitavanka karainagar mappelaikalen matheppu appade

    ReplyDelete
  9. namma pakathula eruku,,,bt evalo vidayam erukirathu thariyamal piotae........valthukal

    ReplyDelete
  10. இது கூடவா இப்ப நடந்த கணக்கெடுப்பில் எடுத்தார்கள்? புள்ளி விவரமெல்லாம் இருக்கு

    ReplyDelete
  11. தவறான தகவல்

    ReplyDelete
  12. அருமையான பதிவு

    ReplyDelete
  13. இது உண்மைதான, யாழ்ப்பாண சமூக அமைப்பில் சீதனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பல பெண்கள் மணம் புரிய முடியாமல் இருப்பதும் உண்மைதான். டாக்டர். எஞ்ஜினியர், எக்கவுண்டன் எல்லோரும் சீதனத்தில் குறியாக இருக்கின்றார்கள்.
    காரைநகர் கரையோரக் கிராமங்களில் ஒரு பழக்கம் ஏற்பட்டுவருகின்றது. படித்த இளைஞர்கள், ஐரோப்பா, கட்டார் நாடுகளில் பணி புரிவோர் கட்டாயமாக காரைநகருக்கு வெளியில் பெண் தேடுகின்றார்கள். ஊர்ப் பெண்களைத் திருமணம் செய்ய விரும்பவில்லையாம். காரணம், சீதனம்தான். அது மட்டுமல்ல வீடுவளவுமட்டுமல்ல நல்ல தண்ணீர் கிணறும் சீதமாக கேட்கின்றார்கள்.திருமணம் முடித்த பின்னர் அவர்கள் புகுந்தவீட்டில் குடியேறிவிடுவார்கள். நல்லநாள், பெருநாட்களில் மட்டும் பெற்றோரை வந்து பார்க்கின்றார்கள்.

    ReplyDelete