Wednesday, July 4, 2012

கைக் குழந்தையையும் காமத்துடன் பார்க்கும் அரக்கர்கள்: கருவறையில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு!

இலங்கை மக்களிடத்தில் மனிதம் மரணித்து விட்டது என புலம்பத்தான் முடிகிறது. நிகழ்கால நிதர்சனங்கள் அப்படி இருக்கிறது. அன்பு, பாசம், ஒற்றுமை, சகோதரத்துவம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அந்த கோர சம்பவம் பதிவாகியிருக்காது.

கூட்டுக் குடும்பம் சிதறி, தனித் தனி குடும்பங்கள் உருவாகி இன்று உருக்குலைந்து போகின்றன. சிறுவர்களை வழிநடத்தக் கூடிய முதியவர்கள் அவர்களுடன் இல்லை. தாய் தந்தை இருவரும் பொருளாதாரத்தை கவனிப்பதை தமது நேரத்தை செலவளிக்கின்றனர்.



பிள்ளைகளது சிந்தனைகள் எப்படி இருக்கின்றன அவர்கள் போகும் வழி சரியானதா ? தவறானதா ? என்று அவதானிக்க கூட பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. தனிமையும் தீய பழக்கவழக்கங்களாலும் பிள்ளைகள் செய்யும் செயல்கள் எல்லை மீறிப் போகவே பெற்றோர்கள் கலங்குகின்றனர்.

Tuesday, May 22, 2012

புகுந்த வீட்டிற்கு அனுப்பவேண்டிய மகளை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்


அன்பு, பாசம், ஒழுக்கம், முயற்சி, நன்மை, தீமை என உலக வாழ்வின் அனைத்து அடிப்படை விடயங்ளையும் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முதல் ஆசான்களாக பெற்றோர்கள் இருக்கவேண்டும். அது பெற்றோர்களின் கடமையும் கூட. சிலர் அவ்வாறு வாழ்கிறார்கள். சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சரியான வழியில் வழிநடத்த தவறுகின்றனர்.


பிள்ளைகள் சிலரின் தவறான முடிவுகளிற்கு அல்லது பிள்ளைகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தூண்டுதல்களாக, காரணியாக பெற்றோர்களே இருப்பது கசப்பான உண்மையும் கூட. பெற்றோர்களின் தவறான செயற்பாடுகளால் பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

Saturday, April 21, 2012

வெளிநாடுகளில் நம்மவர்களின் தில்லு முள்ளுகள்

உலகின் எல்லா மூலைகளிலும் தன் பெயரை பதித்துள்ள இலங்கைத் தமிழன் தன் தனித்துவத்தையும் பதிக்காமல் இல்லை. கல்விக்குப் பெயர்போன யாழ் மண், யாழ்ப்பாணத்தான் இப்போது தனது பெயரை விசித்திரமாக பல சாதனைகளை புரிந்து பதித்துள்ளான். 


தழிழன் என்றொரு இனம் உண்டு. அதற்கு தனிச் சிறப்புண்டு என்று தமிழர்களை போற்றி தலையில் துக்கி வைத்துள்ளது இந்த உலகம். நல்ல செயல்களால் தன்னை அலங்கரித்துக் கொண்ட தமிழன், இப்போது உலகில் உள்ள கள்ள வேலைகள் அனைத்தையும் செய்து தன் இனத்தின் தனித்துவத்தை விற்று வருகிறான். 


வெளிநாடு சென்றுள்ள நம்மவர்கள் ஒருசிலர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அங்கு நேர்மையாக முன்னுக்கு வரும் இளைஞர்கள் மத்தியில் பலர் பல்வேறுபட்ட பிழையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை மறுக்கமுடியாது. இவ்வளவு பில்டப்பையும் பாத்து கொடூரமா பதிவை வாசிச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல..............

Sunday, April 8, 2012

கொழும்பு பஸ்களில் ஆண்களின் அட்டகாசங்கள்


இலங்கையின் வியாபார நகரமாகிய கொழும்பில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் போக்குவரத்து சாதனம் பஸ்தான். 

இந்த பஸ்களில் பெண்கள் பிரயாணஞ் செய்வதென்றால் அப்பப்பா...... ஒரு நரக லோகம் தான். காலையிலும் மாலையிலும் வேலைக்கு போய்வரும் பெண்கள், பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகள் பஸ் பிரயாணத்தில் படும் பாடு கொஞ்ச நெஞ்சம் இல்லை.

காலையில் எழும்பி உற்சாகத்தோட வேலைக்கோ பாடசாலைக்கோ வெளிக்கிட்டு ஓடிப் போய் பஸ்ஸ பிடிச்சு ஒரு மாதிரி ஏறினா, அதில் வரும் அன்புச் சகோதரர்கள் இருக்கினம் பாருங்கோ நாய மாதிரி நாக்கில வீணீர் வடிய வடிய ஒரு பார்வை பாப்பினம்.



அதோட விடுவினமா சாரதி பிறேக் போட்டா என்ன போடாட்டி என்ன ஒரு ஆட்டம் ஆடுவினம். பிறகு எப்படா பாதசாரதிகள் கடவை வரும் சட்டெண சாரதி பிறேக் பிடிப்பார் என்று பாத்துக் கொண்டு இருப்பார்கள்.

Tuesday, March 13, 2012

காரைநகரானின் திருமணத்தில் கோடிகள் படும் பாடு

யாழ் மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் ஏழு தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சப்த தீவுகள் என கூறுவர். காரைநகர், வேலணை, புங்குடுதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவை தீவு, மண்டை தீவு என்பனவே இந்த சப்த தீவுகள். ஏனைய தீவுகளை விடவும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருப்பது காரைநகர் ஆகும். காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடைய தீவு.



இங்கு அதிகமான காரைச் செடிகள் இருந்தமையின் காரணமாக காரைநககர் என பெயர் வந்ததாக கூறுவர். காரைநகர் வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகளைக் கொண்டுள்ளது.