Sunday, January 29, 2012

ஊடகத்துறையில் நிலைக்க முக்கியமாக தெரிந்திருக்க வேண்டிய தாரக மந்திரம்!



இலக்கியங்களை காலத்தின் கண்ணாடிகள் என கூறுவர். அந்த இலக்கியங்களையும் வெளியுலகத்திற்கு கொண்டு வருவதற்கு ஊடகங்கள் இன்றியமையாதவை. சமூகத்தின் மத்தியில் ஊடகங்களின் தாக்கம் மிக அதிகம்.

ஏன் இன்றைய காலத்தில் தனி மனித வாழ்க்கையிலும் ஊடகங்கள் நிமிடத்திற்கு நிமிடம் தாக்கம் விளைவித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

பத்திரிக்கை, வானொலி. தொலைக்காட்சி என்றிருந்த ஊடகங்கள் இன்று இணைய ஆக்கிரமிப்பின் மூலம் இளைஞர்களிடத்தில் மிக நெருங்கி விட்டன. ஊடகங்களில் பணியாற்ற வேண்டும் என பல இளைஞர் யுவதிகளுக்கு ஆர்வம் அதிகம். 




ஊடகங்களை ஓர் வாசகர், ரசிகர் என்ற ரீதியில் இருந்து பார்க்கும் போது மிக அழகான பூஞ் சோலையாக, சுதந்திர மானுட பூமியாக தெரியும். ஆனால் அதன் பிறிதொரு முகம் எப்படியிருக்கும். பலருக்கும் தெரியாத விடயம் அது.

ஊடகங்கள் பற்றியும், ஊடகவியலாளர்கள் பற்றியும் எழுதுவதற்கு பல விடயங்கள் இருந்தாலும் ஒரு ஊடகத்தில் நிலைத்து நிற்பதற்கு மிக முக்கியமாக தேவைப்படும் விடயம் பற்றியே நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். 

சிலருக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறேன் உண்மை இது தான். உங்களுக்கு நல்லா பொய் சொல்லத் தெரியுமா அப்படி என்றால் நீங்கள் நிச்சயமாக ஊடக உலகில் கொடி கட்டிப் பறப்பீர்கள். 



வீட்டிலும் நண்பர்களிடத்திலும் தினந்தோறும் சொல்லி திரியும் பொய் எல்லாம் போதாது.  அதை விடவும் மேலதிகமாக கட்டுக் கட்டாக பொய் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். 

அப்படித் தெரியும் என்றால் நீங்களும் ஊடகத் துறையில் நல்ல பெயருடன் நிலைத்து நிற்பீர்கள். 

இங்கு முக்கியமாக பார்க்க வேண்டிய விடயம் நல்ல பெயருடன்.... உண்மையாக மக்கள் நலனில் ஈடுபாடு கொண்டவனுக்கு கிடைக்காத அந்த நாமம் வாயாற பொய் சொல்லித் திரிபவனுக்கு நிச்சயம் கிடைக்கும்.

இங்கு ஊடகத்துறையை பொதுவாக சொல்லியிருப்பதால், எல்லோரும் ஒன்று என சொல்லவரவில்லை. உண்மையாக நேர்மையாக கடமை புரிபவர்களும் எங்கோ ஒரு மூலையில் இருக்கத் தான் செய்கிறார்கள். 

ஆனால் அவர்களுடைய நிலை ? அதை இன்னுமொரு பதிவில் பார்க்கலாம். 

2 comments:

  1. எங்கள் மூன்றாம்கோணம் வலைப்பத்திரிக்கையில் இலங்கை சிறப்பு நிருபராக இருக்க சம்மதமா? இருப்பின் moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்!

    ReplyDelete
  2. பொய் சொல்லுகிறவர்கள் ஊடகத் துறையில் நிலைத்து நிற்கிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.அவர்கள் சொல்லுகிற விசயம் வாசகர்களுக்கு பொய் என்று தெரிந்து விடுமாயின் அவர்களின் நிலைப்பாடு குறையும்.பொய் நிலைத்திருப்பது போல் பொய் தோற்றம் தரும், நிலையாது!!

    ReplyDelete